செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (11:58 IST)

மேஷம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்   புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன்  -  பாக்கிய ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்: கம்பீரமான தோற்றத்தையும் பரந்த மனப்பான்மையும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் யாரையேனும் தவறாகப் பேசிவிட்டால்  அது அப்படியே பலித்துவிடும் என்பதால் நீங்கள் உங்களைக் கட்டுப்ப்டுத்திக் கொள்வதே சிறப்பாகும். இந்த மாதம் நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள்.  பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும்.
 
குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடலுபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர் – வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும்.  லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுத்துக் கொள்வீர்கள். 
 
தொழில் வியாபாரிகளுக்கு கடன் விஷயத்தில் கவனமாக இருந்தால் மனநிறைவிற்கு குறைவிராது.  வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பது அவசியமாகும்.  அதே நேரத்தில்  அவர்களைத்திருப்தியடையச் செய்யும் வகையில் தரமான பொருள்களைக் கொள்முதல் செய்து வைப்பது வியாபாரத்தை பெருக்க உதவும். 
 
உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக்  கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். உங்கள் அன்றாடப் பணிகளில் சிறு  குறையும் நேராமல் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதே மிக அவசியம். 
 
கலைத்துறையினருக்கு  இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன்  மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு. பின்னணி இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள்  போன்றோர் கூடுதலான வாய்ப்புகளைப் பெற முடியும்.  
 
அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து  வருவதன்மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். 
 
பெண்களுக்கு  வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும்.  தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி  திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும்.  உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் அடிக்கடி ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் கவனமாக இருந்து  வருவது நல்லது.
 
மாணவர்களுக்கு  நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும்.  தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று  உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு  செய்வீர்கள். 
 
அஸ்வினி:  இந்த மாதம் ஆரோக்கிய கோளாறுகளிலிருந்து விடுபட முடியும்.  புத்திர வழியில் மகிழ்ச்சியடையக்கூடிய நிலை உண்டு.   உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் வகையில் உங்கள் பணிகளில் கவனம்  செலுத்துவது நல்லது.  பெண்களால்  அனுகூலமடையும் வாய்ப்பு சிலருக்கு அமையக் கூடும். பொதுவாக எதிலும் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் சங்கடங்கள் பெரும்பாலும்  விலகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும்.
 
பரணி:  இந்த மாதம்  எதிர்பார்க்கும் உதவிகள் எதுவாயினும் கிடைக்க வாய்ப்புண்டு.  ஆலய தரிசனம் கண்டுவர குடும்பத்துடன் ஒரு  பயணத்தை மேற்கொண்டு திரும்புவீர்கள். அரசு வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.  நீர்நிலைகளில் எச்சரிக்கை தேவை.  அவசர பயணம்  மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் திருப்தி தரக்கூடிய ஒத்துழைப்பு கிடைத்து வரும்.  சிலர் அசையாச் சொத்துக்களை  வாங்குவதில் முனையக்கூடும். 
 
கிருத்திகை: இந்த மாதம்  புதிய முயற்சிகள் எதிலும் அவரசப்பட்டு ஈடுபடாதீர்கள். ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து சாதக பாதகங்களை  அறிந்த பின்னர் திட்டமிட்டுச் செயல் படுத்துவது நல்லது. கோபத்தைக் குறைத்து அனைவரிடமும் கனிவாகப் பேசிப் பழகுவது நல்லது.  பயணங்களின் போது மிகவும் எச்சரிக்கையாய் இருந்து வருவது அவசியம். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு ஏற்படக்கூடிய நிலை உண்டு.  நண்பர்களால் சிலர் அனுகூலமடையக்கூடும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். “ஓம்  சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும். 
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 20, 21.